தீராத தோல் நோய்கள் .....செய்வினையின் பாதிப்பா......


நீண்ட காலமாக தொல்லை கொடுக்கும் நோய் பாதிப்புகளில் தோல் நோய்களும் ஒன்று. வருடகணக்கில் மருந்து மத்திரைகளை உட் கொண்டாலும் பாதிப்புகள் முழுமையாக நீங்காமல் அவதிபடுபவர்கள் மிக அதிகம்.  அர்டிகேரியா...எக்ஸிமா...ஆர்ஜியா..(Argyria)  நெக்ரோபியாஸிஸ் லிபியோடிக (Necrobiosis lipoidica) போன்ற பிரச்சனைகள். வருவதற்கு சரியான காரணங்கள் இதுவரை சொல்லப்படவில்லை. 

மருத்துவர்களிடம் கேட்டால் அலர்ஜியால் வருவது என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவார்கள்.
 என்ன விதமான அலர்ஜியால் வருகிறது...எதனால் அலர்ஜி உருவாகிறது...எப்படி பரவுகிறது..என்ற கேள்விகளுக்கு  பெரும்பாலும் தெளிவான பதில்கள் அளிப்பதில்லை.

பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு யாரோ மருந்து வைத்து விட்டதாகவும் செய்வினையால் தங்களுக்கு தோல் நோய் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லுகின்றனர்.

மருந்து வைப்பது  செய்வினை என்றாலே விஷ தன்மைவாய்ந்த தாவரங்களையோ விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துக்களையோ உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புதான். 
பாரம்பர்ய நாட்டு மருத்துவத்தில் களுநஞ்சு களஞ்சிக நஞ்சு என்று இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகை நஞ்சுகள் உள்ள மருந்துக்களை உட் கொண்டால் அவை தீராத தோல் நோய்களை உருவாக்கும். பொதுவாக விஷதன்மை கொண்ட நீர் தாவரங்களை உட்கொள்ளும் போது அவற்றிலுள்ள ஆர்சணிக்..சிக்யூ டாக்ஸின், மற்றும் ஈயம் போன்றவை தோல் நோய்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக நீர்சிலும்பை செங்கழுநீர் ஆகியவற்றில் இருக்கும் நச்சுதன்மை உடலின் வியர்வை துவாரங்களிலும் ரோமங்களின் நுண்ணறைகளிலும் நச்சு கிருமிகளை உருவாக்கும் இயல்புடையது. இதனால் அடிக்கடி காரணமில்லாமல் உடலில் கட்டிகள் தோன்றும். சில நாட்களில் அந்த கட்டிகள் உடைந்து புண்களாக மாறும்.

மயிர்பாசி..தூவல் போன்ற தண்ணீர் கரையோரம் இருக்கும் தாவரங்களில் இருக்கும் ஹையோசயாமின் என்ற நச்சு பொருள் தோலில் உள்ள ஈரபதத்தை குறைத்து விடும். இதனால் தோலில் வெடிப்புகள் ஏற்படுவது காரணமற்ற கீரல்கள் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். தோலில் திட்டு திட்டாக படர்வது தோலில் அங்கங்கே கறுப்பு நிறம் பரவுவது போன்றவை ஹையோசயாமின் நச்சு பொருளால் ஏற்படும்.

காணாகடி எனப்படும் அர்டிகேரியா என்ற தோல் நோய் பாசிபடிந்த குளங்களில் இருக்கும் அந்திகொடி என்ற தாவரத்தால் அதிகம் பரவுகிரது.பெரும்பாலும் குழந்தை இன்மைக்கு மருந்து கொடுக்கும் சாமியார்கள் குறிசொல்பவர்கள் கோவில் குளங்களில் இருக்கும் இந்த தாவரத்தை பயன் படுத்துகின்றனர்.  இதிலுள்ள ஆர்சணிக் அமிலம் தீவிர அர்டிகேரியாவை ஏற்படுத்தும்.  

தாவர நச்சுக்கள் உள்ள உணவை உட்கொள்வதால் அந்த உணவுகள் ஜீரணமாகி நச்சு தன்மை ரத்தத்தில் கலந்து விடுகிறது. ரத்தத்தில் கந்திருக்கும் நச்சு தன்மையை நீக்காமல் மேலோட்டமாக தோல் பாதிப்புகளுகு மட்டும் சிகிச்சை மேற்கொள்ளும் போது நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை.

பல தாவர நச்சுக்கள் என்சைம் இன்ஹெபிரடராக செயல்பட கூடியவை இவை பாராசைட் எனப்படும் நுண்கிருமிகளை உருவாக்க கூடியவை. இதனால் நீண்ட நால் தோல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

செய்வினை இடுமருந்து என்ற பெயரில் சொல்லப்படும் அனைத்தும் இத்தகைய நச்சு தாவரங்களை பயன்படுத்தி செய்யப்படும் வித்தைகளே. உமிழ் நீர் சோதனை...ரத்த சோதனை மற்றும் பாதிப்புகளின் தன்மை ஆகியவற்றைக்கொண்டு எந்த வித நச்சு தன்மை உடலில் தங்கி இருக்கிறது என்பதை அறிந்துகொண்டும் சரியான நச்சு முறிவு மருந்துக்களை உட் கொண்டு பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொண்டால் தோல் நோய்களில் இருந்து நிரந்தர தீர்வு பெறலாம்.  







 





 

Comments

Popular posts from this blog

kala jadhoo.....of toxic herbs

ஏவல்